முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வாழ்த்து


முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வாழ்த்து
x

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வாழ்த்து தொிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 10-ந் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.குமரகுரு தலைமையில் திருக்கோவிலூர் நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளரும், நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான எஸ்.இளவரசன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளரும் முன்னாள் அரசு வக்கீலுமான எஸ்.ரஜினிகாந்த் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story