குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வாழ்த்து


குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 10:24 AM GMT)

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு வாழ்த்து

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு நாண் மங்கல விழா(பிறந்தநாள் விழா) நேற்று குன்றக்குடி ஆதீன திருமடத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை ஆதீனம் வேத சிவகாம வித்வான், பிரான்மலை முதல் ஸ்தானிகர். சிவகங்கை அறநிலையத்துறை மண்டல கமிட்டி சிவாச்சாரியாருமான உமாபதி தலைமை தாங்கினார். உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நாண் மங்கல விழாவில் கலந்து கொண்டு அவருக்கு மாலை அணிவித்து மலர் கீரிடம் சூட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, கருங்காலக்குடி குகன் மாணிக்கம் செட்டியார் குடும்பத்தினர், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் கலந்து கொண்டனர்.


Next Story