செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதல் அமைச்சருக்கு வாழ்த்துகள் -அண்ணாமலை டுவீட்


செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய  முதல் அமைச்சருக்கு வாழ்த்துகள் -அண்ணாமலை டுவீட்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதல் அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் .வாழ்த்துகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது.க, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதல் அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் .வாழ்த்துகள் என டுவிட்டர் பதிவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும் ,வீரர்,வீராங்கனைகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story