புதிய கலெக்டருக்கு வாழ்த்து


புதிய கலெக்டருக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட புதிய கலெக்டருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தென்காசி

கடையநல்லூர்:

புதிதாக பொறுப்பேற்ற தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை, முன்னாள் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை தலைமையில் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் லாலா சங்கர பாண்டியன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன் முத்தையா பாண்டியன், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஐவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளும் புதிய கலெக்டரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு கூட்டமைப்பு தலைவரும், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனுமான, பொன்.முத்தையா பாண்டியன், பொருளாளர் திவ்யா மணிகண்டன், துணை செயலாளர்கள் காவேரி, சீனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story