செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் - ஜி.கே.வாசன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவில் தங்கத்தை உஸ்பெகிஸ்தான் அணியும், வெள்ளிப் பதக்கத்தை அர்மேனியா அணியும், வெண்கலம் பதக்கத்தை இந்தியா அணியும் வென்றுள்ளது. மேலும் பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் வென்றும், வெள்ளிப் பதக்கத்தை ஜார்ஜியா அணியும், வெண்கல பதக்கத்தை இந்தியா அணியும் வென்றுள்ளது. வெற்றிப் பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
மேலும், நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 22-தங்கம், 16-வெள்ளி 23-வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று உலகளவில் 4-ம் இடத்தை பெற்றிருக்கிறது. வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அத்தனை வீரர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
Related Tags :
Next Story