சாலையில் நடுவே விழுந்து கிடக்கும் கான்கிரீட் தடுப்பு


சாலையில் நடுவே விழுந்து கிடக்கும் கான்கிரீட் தடுப்பு
x
தினத்தந்தி 11 July 2023 4:04 PM IST (Updated: 12 July 2023 5:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர்-தாராபுரம் சாலை பலவஞ்சிபாளையம் பிரிவில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தடுப்பு மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர்-தாராபுரம் சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. தாராபுரம் சாலையில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி வரை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் திருப்பூர்-தாராபுரம் சாலை பலவஞ்சிபாளையம் பிரிவில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தடுப்பு மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்பு கீழே சாய்ந்தது.

இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் ஒரு வகையான அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சாலையில் கீழே விழுந்து கிடக்கும் காங்கிரீட் தடுப்பை சரி செய்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story