காங்கிரஸ் கட்சியினர் பிரசார நடைபயணம்


காங்கிரஸ் கட்சியினர் பிரசார நடைபயணம்
x

சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தையொட்டி தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்


சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தையொட்டி தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் பிரசார நடைபயணம்

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பிரசார நடை பயணம் நேற்று நடந்தது. இந்த பிரசார நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக தஞ்சை மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பிரசார நடைபயணம் தொடங்கியது.மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாத்தம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், குணா பரமேஸ்வரி, முன்னாள் மாநில துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

14-ந் தேதி நிறைவு

இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், சிறுபான்மைப்பிரிவு தலைவர் நாகூர்கனி, வட்டார தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, இப்ராகிம்ஷா, அன்பழகன், கோவி.செந்தில், அத்திவெட்டி நாராயணன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பிரசார நடைபயணம் தஞ்சையில் இருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வழியாக மல்லிப்பட்டினத்தை வருகிற 14-ந் தேதி சென்றடைகிறது.இதைப்போல தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் திருவையாறு காவிரி பாலத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை மாநில இளைஞரணி காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நடைபயணத்தில் கும்பகோணம் மேயர் சரவணன், மாவட்ட பொதுசெயலாளர்ராஜா, வட்டார தலைவர்கள் மகாதேவன், அறிவழகன், கலைச்செல்வன், ராஜலிங்கம், திருவையாறு நகர தலைவர் ராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவையாறில் தொடங்கிய நடைபயணம் ஈச்சங்குடி, கணபதி அக்ரகாரம், கபிஸ்தலம், திருப்பனந்தாள் திருவிடைமருதூர் ஆகிய ஊர்கள் வழியாக சென்று கும்பகோணம் காந்தி சிலை முன்பு வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது.


Next Story