காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாரதி, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் முகமது சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திரண்ட காங்கிரஸ் கட்சியினர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story