விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை; பிரதமர் மோடி


விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சில கட்சிகளுக்கு  பிடிக்கவில்லை;  பிரதமர் மோடி
x

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:- ஒடிசாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடப்பதால் வளர்ச்சிக்கான பயணம் புதிய சிறகுகளை பெற்றிருக்கிறது. ஒடிசாவில் பழங்குடியின பெண் எனக்கு இனிப்பு ஊட்டியபோது என் தாயின் நினைவு வந்தது. அந்த பெண்ணின் ஆசிர்வாதம் போன்ற உணர்வுப்பூர்வமான அனுபவம் தான் என் வாழ்வின் மூலதனம். என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன" என்றார்.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி விட்டிற்கு சென்றது குறித்து பேசிய பிரதமர் மோடி, " விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர். அதிகாரப்பசி உள்ளவர்கள் நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என நினைப்பவர்கள், அதை பொறுக்க முடியாமல் விமர்சிக்கின்றனர்" என்றார்.

1 More update

Next Story