காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மண்டல மற்றும் வட்டார நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட துணைத்தலைவர்கள் வண்ணை சுப்பிரமணியன், காளை ரசூல், பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், உதயகுமார், மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ராஜேந்திரன், ரசூல் மைதீன், அய்யப்பன், மணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972 முதல் காங்கிரஸ் கட்சிக்காக செய்து வரும் பல்வேறு சேவைகள் மற்றும் அவரது அர்ப்பணிப்பை பாராட்டி பொதுவாழ்வில் அவரது பொன்விழா என்ற நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும், வாக்குச்சாவடிகளில் பூத்கமிட்டி, உறுப்பினர்கள் சேர்த்தல், மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்துவது, சாலைகளை சீரமைக்க வலியுறுத்துவது, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் 200 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.