காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மானாமதுைர,
மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், நகர் தலைவர் கணேசன், எஸ்.எஸ்.டி. மாநில துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், வட்டார தலைவர் கணேசன், இளையான்குடி வட்டத்தில் மலைச்சாமி, சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சோனைராஜ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் பழனிவேல்ராஜன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கியசாமி, முன்னாள் நகர் காங்கிரஸ் தலைவர் ராமு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பேசும்போது, ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்ததை கண்டித்து ஏற்கனவே பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பா.ஜ.க.வை கண்டித்தும், பொதுமக்களுக்கு மோடி அரசின் தவறான நடவடிக்கையை எடுத்து கூறும் வகையிலும் ஆங்காங்கே போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.