காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நிர்வாகிகள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் அல்அமீன், மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பேரூராட்சி பொறுப்பாளர் குமார், பொருளாளர் பாண்டி, சிறுபான்மை பிரிவு தலைவர் அம்பலம் ராவுத்தர் நெய்னார், பொருளாளர் சாகுல் ஹமீது, கவுன்சிலர் இப்ராகிம்ஷா நகர் துணைத் தலைவர் கரீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story