காங்கிரஸ் கொடியேற்று விழா


காங்கிரஸ் கொடியேற்று விழா
x

வடக்கன்குளத்தில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடந்தது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா என்ற பாதயாத்திரையை நிறைவு செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி காஷ்மீரில் கொடி ஏற்றினார். இதனை கொண்டாடும் விதத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வடக்கன்குளத்தில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3,250 கிலோமீட்டர் வரை ராகுல் காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். இதனை பாராட்டும் விதத்தில் காந்தி சிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் இதற்கு முன்பும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் பல ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், வள்ளியூர் வட்டாரத் தலைவர் அருள்தாஸ், வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், ஜோதி, தனக்கர்குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story