இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்புள்ள இந்திராகாந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மாநில வக்கீல் அணி இணை தலைவர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், கவிபாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் எஸ்பி.முரளிராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் மாரியப்பன், சிவன் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு
களக்காட்டில் உள்ள இந்திரா காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கி, இந்திரா காந்தி சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வள்ளியூர்
வள்ளியூர் பழைய பஸ்நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட இந்திராகாந்தி உருவப்படத்துக்கு வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் தலைமையில், நகர காங்கிரஸ் தலைவர் அல்போன்ஸ் ராஜா முன்னிலையில், மாநில காங்கிரஸ் செயலாளர் ஜோதி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.