இந்திராகாந்தி சிலைக்கு தனித்தனியாக மாலை அணிவித்த காங்கிரஸ் தலைவர்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது கட்சி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 105-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்திராகாந்தி சிலைக்கு தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், ஈ.வெ.கே.எஸ் இளங்கோவன், எம். கிருஷ்ணசாமி, ஆகியோர் மலர் மாலை அணிவித்து சென்றனர்.
கட்சியின் மூத்த தலைவர்கள், இருபிரிவினர்களாக சென்று மாலை அணிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story