காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லட்சுமணன் வரவேற்றார். வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ரவி, கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.எல்.ஏவும்., மாவட்ட தலைவருமான ராஜ்குமார் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தொடர்ந்து வருகிற 20-ந் தேதிக்குள் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் வட்டார வாரியாக நடத்திட வேண்டும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றிவாகை தேடி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய துணை பெரும் தலைவர் பானு சேகர், குமார், பிரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.