காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பனைக்குளம்
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் பணியாளர் காங்கிரஸ் சார்பில் உச்சிப்புளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டபம் வட்டார முன்னாள் தலைவர் விஜய ரூபன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அமைப்புசாரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் தெய்வேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த திட்டத்தின் மக்கள் விரோத அம்சங்களை எடுத்துரைத்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் மேகநாதன், முத்துகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு சாரா காங்கிரஸ் தலைவர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் உச்சிப்புளி காங்கிரஸ் தலைவர் நாகரத்தினம், நொச்சி ஊரணி சுப்பிரமணியம், தமிழரசன், கோபால், நடராஜன், சிங்காரம், லோகேஸ்வரன், மூர்த்தி, கணேசன், ஆளவந்தான், ஆறுமுகம், மகளிரணி, முருகேஸ்வரி, பிரபு, மண்டபம் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.