காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் மீதான பதவிபறிப்பு நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நகர் கருமாதிமடம் அருகே நகர காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால கிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், வெயிலுமுத்து, காந்தி ராஜன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் ஜெயபால், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story