காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா


காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா
x

காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா

சிவகங்கை

மானாமதுரை

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாளை முன்னிட்டு மானாமதுரையில் சிப்காட், காந்திசிலை, அண்ணாதுரை சிலை கண்ணார் தெரு, காந்தி சிலை உள்ளிட்ட 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு மூத்த தலைவர் முருகேசன், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் முருகேகசன், சட்டமன்ற பொது செயலாளர் சஞ்சய் காந்தி, கவுன்சிலர் புருஷோத்தமன், வட்டாரத் தலைவர் ஆரோக்கியதாஸ், நிர்வாகிகள் பால் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆனந்த வல்லியம்மன் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கொடியேற்று விழாவில் நிர்வாகிகள், வக்கீல் முத்துக்குமார், முல்லை சின்னச்சாமி, காளிமுத்து, ராமகிருஷ்ணன், ராஜாராம், பாண்டிவேலு, முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story