ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருச்சி
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தியின் உருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ஆர்., திருச்சி மாநகர 39-வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ், ஜீவாநகர் மனோகர் மற்றும் திருச்சி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர்கள், மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story