மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டை பகுதியில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, 29-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா குமரேசன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் அஷரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பெண்களை அவமானப்படுத்திய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, ஷானவாஸ், மெடிக்கல் பிரபு, மாநில பொதுச்செயலாளர் குமரேசன், விவசாய பிரிவு சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி தலைமையிலும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையிலும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


Next Story