மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமுக்கம் மைதானம் எதிரே உள்ள நேரு சிலை முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அப்போது மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், ஜெய்ஹிந்த்புரம் முருகன், மாநகர் மகளிர் அணி தலைவி ஷானவாஸ் பேகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சையது பாபு, பொருளாளர் ரவிச்சந்திரன், பறக்கும் படை பாலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் சுப்பராயாலு, காந்திஜி முன்னிலை வகித்தனர்.

மனித உரிமை மாவட்ட தலைவர் சரந்தாங்கிமுத்து, நகர் தலைவர்கள் வைரமணி, சசிகுமார், திரவியம், நிர்வாகிகள் சோனை முத்து, மலைக்கனி, ராமமூர்த்தி, சந்திரசேகரன், முருகன், தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட நிர்வாகிகள் குருநாதன், பவுன்ராஜ், பழனிவேல், ராமன், சங்கரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

காமராஜர் சிலையில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் வ.உ.சி. சிலை வரை சென்றது. அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story