காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

பாதயாத்திரை

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிற்காக போராடியவர்களை நினைவு கூரும் வகையிலும், காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கும் வகையிலும் முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை பாதயாத்திரை பயணம் நேற்று தொடங்கியது.

பாதயாத்திரைக்கு மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சதிஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக் வரவேற்றார். மூத்த உறுப்பினர் பேட்டை அன்பழகன் கொடியசைத்து பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டிக்கு சென்றது

காலை 7 மணிக்கு தொடங்கிய பாதயாத்திரை தெற்கு தெரு, பெரியகடைதெரு, பழைய பஸ் நிலையம், ஆசாத் நகர், புதிய பஸ் நிலையம், ஆலங்காடு, உப்பூர், கோபாலசமுத்திரம், நாச்சிக்குளம், உதயமார்த்தாண்டபுரம், பின்னத்தூர், சங்கேந்தி, எடையூர், அம்மலூர், பாண்டி, கள்ளிக்குடி வழியாக திருத்துறைப்பூண்டிக்கு சென்றது. இந்த பாதயாத்திரை குழுவினருக்கு பாண்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன் தலைமையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் மாநில நிர்வாகிகள் மன்னை வடுகநாதன், நெடுவை குணசேகரன், வட்டார தலைவர்கள் வடுகநாதன், ரெங்கசாமி, சங்கர வடிவேல், பாஸ்கர், நகர தலைவர்கள் கனகவேல், எழிலரசன், மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகமது, சட்டமன்ற பொறுப்பாளர் அன்வர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நபிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story