காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது.
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடக்கிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடந்தது. திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகர் பகுதியில் இருந்து நேற்று காலை தொடங்கிய பாதயாத்திரைக்கு மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் குமரேசன் வரவேற்றார். காங்கிரஸ் நகராட்சி கவுன்சிலர் பரத் முன்னிலை வகித்தார்.
பாதயாத்திரையில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏலகிரி செல்வம், பி.கணேஷ்மல், நகரத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் தலைவர் வெங்கடேசன் உள்பட 100 கணக்கானோர் வாணியம்பாடி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக பாதயாத்திரையாக சென்று ஹவுசிங் போர்டு காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. பாதயாத்திரையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பொருளாதார பேரழிவில் இந்தியா சிக்கி உள்ளது. நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க. வெளியேற வேண்டும என் கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.