காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
நெல்லை டவுனில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர்.
திருநெல்வேலி
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு நிறைவு அடைந்ததையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பவளவிழா பாதயாத்திரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து நேற்று பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரைக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் வக்கீல் பிரிவு இணைத்தலைவர் வக்கீல் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்து பேசினார். டவுன் ஆர்ச் அருகே தொடங்கிய பாதயாத்திரை தெற்கு மவுண்ட் ரோடு வழியாக டவுன் காந்தி சிலை முன்பு வந்தடைந்தது. இந்த பாதயாத்திரையில் முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தராஜ பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story