காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
குழித்துறை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி
களியக்காவிளை:
குழித்துறை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்,
இதில் குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், பினில் முத்து, ஆஸ்கர் பிரடி, மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story