மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை


மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பழங்குடி பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் படுகொலைகளை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தன்னை சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் பிரதமருக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஜம்புகென்னடி, மூங்கில் ராமலிங்கம், நரேந்திரன், வட்டார தலைவர்கள் அன்பழகன், ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதேபோல் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரசார் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கணிவண்ணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி சார்பில் செம்பனார்கோவில் கடை வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மூத்த நிர்வாகி பண்னை சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


Next Story