மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சோளிங்கரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தை கண்டிக்கும் விதமாக சோளிங்கர் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நகர தலைவர் கோபால் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரகுராம், ஜெயவேலு முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து முனிரத்தினம் எம்.எல்.ஏ. கூறுகையில், ''வரும் நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி அதிக அளவில் இடங்களை பிடித்து வெற்றி பெறும்''என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அருண், கல்பனா, ஒன்றிய தலைவர் கார்த்திக், உதயகுமார், செல்வம், பிரகாஷ், நரசிம்மன், காவேரிப்பாக்கம் மணிவேலு, சோமசுந்தரம், குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story