இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை


இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திரா காந்தி பிறந்த நாள்

தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பீச் ரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, வர்த்தக பிரிவு மாநகர தலைவர் அருள்வளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்திரா காந்தி சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழுகுமலை

கழுகுமலை காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, நகர தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், நகர செயலாளர் மரியதங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நகர பொருளாளர் ஜான்வின்சென்ட் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை தலைவர் செல்வம், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் நம்பிராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கந்தையா, மாரியப்பன், சேவாதளம் ஏ.கே.சி. முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி

உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் இந்திரா காந்தி உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை தாங்கினார். நகர தலைவர் எஸ்.எம்.பி.முத்து, மூத்தபிரமுகர் வெற்றிவேல், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் தலைவர் தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story