காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 1:15 AM IST (Updated: 22 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி, துணை தலைவர் ரகுமான், கவுன்சிலர் பாரதி, மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story