காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குளச்சலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
குளச்சல்,
அமலாக்கத்துறையினர் விசாரணை என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அலைக்கழிப்பதாகவும், உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மாற்றியமைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப் ஆகியோர் பேசினர். இதில் நகர துணைத்தலைவர் பிரான்சிஸ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசிங் தலைமையில் கல்லுக்கூட்டம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் மனோகரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story