காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

`நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் கனிவண்ணன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.








Next Story