மந்தாரக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மந்தாரக்குப்பத்தில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மந்தாரக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் தபால் அலுவலகம் எதிரே கங்கைகொண்டான் பேரூராட்சி காங்கிரஸ் சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கங்கைகொண்டான் பேரூர் காங்கிரஸ் தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார்.

இதில் கலந்துகொண்டவர்கள் அத்தியாவசிய பொருளான அரிசி, தயிர் உள்பட அனைத்து பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி. கொண்டு வந்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நகர பொருளாளர் சக்கரவர்த்தி, கம்மாபுரம் வட்டார முன்னாள் தலைவர் ராஜேஷ், தெற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. துணைத் தலைவர் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story