காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் நகர தலைவர் இ.பாரத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ச.பிரபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் ஜெ.விஜய் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பி.கணேஷ்மல், குமரேசன், மாவட்ட பொதுச்செயலாளர் மின்னூர் என்.சங்கரன், எம்பி.கணேஷ், ஒன்றிய தலைவர்கள் ஜானி, ஜாவித் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கவர்னரை கண்டித்தும், கவர்னரை திரும்பப்பெற கோரியுமே கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் காங்கிரஸ் கட்சி நகராட்சி கவுன்சிலர் அபிராமி பாரத் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story