காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். முதலீட்டாளர்களை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி நாகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். நகர தலைவர் உதயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story