காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

தொழிலதிபர் அதானியை விசாரித்து அவர்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, வாணியம்பாடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சி.எல். ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கிார். வாணிம்பாடி நகர தலைவர் தப்ரேஸ், ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பழனி, கதிர்அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அதானின் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொத்தூர் மகேஷ், பிரபா, டாக்டர் கோபி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story