காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அதானி குழுமத்தில் எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை முதலீடு செய்தது தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும், அதானி குழு பங்குகள் சரிவை சந்தித்து வருவதால் அதில் முதலீடு செய்துள்ள ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டு கழக முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதனை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் நகர தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story