காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்ததாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் விருதுநகர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story