காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உடன்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
உடன்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து உடன்குடி சந்தையடித் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா தலைமை தாங்கினார். மாநில மகிளா காங்கிரஸ் செயலர் பியூலா விஜயராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மங்களசெல்வி, இக்னல் ரிகானா, பட்டுக்கனி, மாநில மகிளா காங்கிரஸ் இணைசெயலர் அன்புராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வக்கீல் பிரிவு துணைத்தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






