காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


அதானி குழுமத்தில் மத்திய அரசு நிதிநிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதை கண்டித்தும், இதுகுறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர காங்கிரஸ் தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மூர்த்தி, விருதுநகர் நகர சபை கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story