காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஏரலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் காந்தி சிலை அருகில் பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அதானி அம்பானிக்கு எஸ்.பி.ஐ பங்குகளை தாரைவாய்ப்பு, எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை, மத்திய அரசின் 9 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதில் மாநில பேச்சாளர் பால்துரை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story