காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ராகுல்காந்தி மீது 2 ஆண்டு சிறை தண்டனை எதிரொலியாக எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசை கண்டித்து ஆரணி மணிக்கூண்டு அருகில் நகரசபை உறுப்பினர் டி.ஜெயவேலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் யூ.அருணகிரி, ஏ.ஆர்.அசோக்குமார், ராமலிங்கம், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.பழனி, எஸ்.சி., எஸ்டி. மாவட்ட தலைவர் என்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் எஸ்.பிரசாந்த் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தெள்ளூர் சேகர், இளங்கோவன், சரவணன், சோலை முருகன், ஆசைத்தம்பி, மணிவேல், முருகன், ஏழுமலை, கண்ணப்பன், சிவபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story