செஞ்சேரிமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


செஞ்சேரிமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சேரிமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

ராகுல் காந்தி எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ், சுல்தான் பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சியினர் செஞ்சேரி மலையில் கருப்பு சட்டை, துண்டு அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டாரத் தலைவர் சவுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்,

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகரன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story