தேவாலாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தேவாலாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:58+05:30)

மத்திய அரசை கண்டித்து தேவாலாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

பந்தலூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பந்தலூர் அருகே தேவாலாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் தலைமை தாங்கினார். நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story