மன்னார்குடியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மன்னார்குடியில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாசலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை தாங்கினார். மன்னார்குடி நகர தலைவர் ஆர்.கனகவேல், வட்டார தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவாரூர் நகரத்தலைவர் அருள், கூத்தாநல்லூர் நகர தலைவர் சாம்பசிவம், முத்துப்பேட்டை நகர தலைவர் சதீஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், சண்முகம், வடுகநாதன், அனந்த கிருஷ்ணன், நகர பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, நகர இளைஞர் காங்கிரஸ் ஜோதிராமலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story