திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் என்.வெற்றிசெல்வம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாரங்களை அதானி குழுமத்திற்கு கடன் வழங்க உதவிய மற்றும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரத்தை அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரியும், அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் அண்ணாச்சி, பொது செயலாளர்கள் டி.கதிர்காமன், என்.குணசேகரன், விவசாய பிரிவு தலைவர் சீனுவாசன், துணைத்தலைவர் வீராசாமி மாவட்ட மகளிரணி தலைவி வினோதினி உள்பட நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story