காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x

திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் தலைமை தபால் நிலையம் முன்பு விலைவாசி உயர்வை கண்டித்தும், பாரதீய ஜனதா அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் விநாயகம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் குமார், கண்ணன், ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, சக்திவேல், கார்த்திக், புவனேஸ்வரன், செல்வம், காத்தவராயன், முருகையன், மண்ணாங்கட்டி, மதன்குமார், ஜானி, பொன் ராஜா, அஜீஸ், ஜெய்கணேஷ், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், சையத் ஜலால், சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், திடீரென மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர்.

1 More update

Next Story