காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x

வாணியம்பாடியில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து, வாணியம்பாடி பஸ் நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். முன்னதாக பஸ் நிலையத்தில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளர் செல்வம் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் திருப்பத்தூர் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 150 பேரை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.


Next Story