ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறப்போராட்டம்
ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தினா்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இதை கண்டித்து திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னாள் வட்டார தலைவர் பழனி தலைமை தாங்கினார். மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லதா பீட்டர் முன்னிலை வகித்தார். அரகண்டநல்லூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவின் மாநில துணைத்தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் திருக்கோவிலூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கதிர்வேல், முகையூர் வட்டார தலைவர் முத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story