காங்கிரஸ் கட்சியினர் செங்கோல் யாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் செங்கோல் யாத்திரை
x

திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் செங்கோல் யாத்திரை நடத்தினர்.

திருப்பத்தூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து செங்கோல் யாத்திரை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிஷோர்பிரசாத் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் முக்கிய வீதிகள் வழியாக செங்கோல் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பார்த்தீபன், சிறுபான்மை பிரிவு ஆர்.நவாஸ், ஆம்பூர் எம்.நேதாஜி, திருப்பத்தூர் காங்கிரஸ் பிரமுகர்கள் சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த யாத்திரை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story